உலகிலேயே மிகவும் வயதானவர் 117ஆவது வயதில் காலமானார்!

பிரான்யாஸ், அமெரிக்காவில் பிறந்தவர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலும் இவர் வாழ்ந்துள்ளார். 

உலகிலேயே மிகவும் வயதானவர் 117ஆவது வயதில் காலமானார்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் சாதனை புரிந்தவரான ஸ்பெயினைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் மொரேரா (Maria Branyas Morera), தமது 117ஆவது வயதில் காலமானார். 

பிரான்யாஸ், அமெரிக்காவில் பிறந்தவர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திலும் இவர் வாழ்ந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரது குடும்பம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த சிறிது நேரத்திலேயே 1907ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். டெக்சாஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸில் நேரத்தைச் செலவிட்ட பிறகு, முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்ததால், அவர்களது குடும்பம் 1915 இல் தங்கள் சொந்த ஸ்பெயினுக்குத் திரும்பியது. 

"மரியா பிரான்யாஸ் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். அவர் விரும்பியபடியே தூக்கத்தில் அமைதியாக அவரது உயிர் பிரிந்தது" என்று அவரது குடும்பத்தார் X தளத்தில் பதிவிட்டுள்ளனர். அத்துடன், "அவரது அறிவுரைகளையும் பரிவு மனப்பான்மையையும் நாங்கள் எப்போதும் நினைவுகூருவோம்" என்றும் அதில் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

 2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்துரைத்த பிரான்யாஸின் கடைசி மகள் ரோஸா மொரேட் (Rosa Moret), தமது தாயார் வைத்தியசாலைக்குச் சென்றதில்லை என்றும் உடலில் எந்த வலியும் இல்லாமல் நலமுடன் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மரியா பிரான்யாஸ், தனது 113வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு, 2020இல் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். அப்பொழுதம் அவர் வைத்தியசாலைக்கு செல்லாமல் தன் வீட்டின் அறையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, முழுமையாக குணமடைந்து வந்தார். 

இந்நிலையில், தாம் உடலளவில் மிகவும் பலவீனமாக உணர்வதாகக் பிரான்யாஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். "நேரம் நெருங்கிவிட்டது. அழாதீர்கள், அழுவது எனக்குப் பிடிக்காது. எனக்காகத் துயரப்படாதீர்கள். நான் எங்குச் சென்றாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்" என்று அவரது குடும்பத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் பிரான்யாஸ் பதிவிட்டார்.

இதற்குமுன்னர் பிரான்ஸைச் சேர்ந்த 118 வயது லுஸில் ராண்டன் (Lucile Randon) உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற அடையாளத்தை வைத்திருந்தார். எனினும், கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார்.

அதன் பின்னர் உலகிலேயே மிகவும் வயதானவர் என்று பிரான்யாஸை, கின்னஸ் உலகச் சாதனை அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது.

மரியா பிரான்யாஸ் மொரேரா, தனது 117ஆவது பிறந்தநாளை, கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திகதி தமது குடும்பத்தாருடன் கொண்டாடியிருந்தார். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT