நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜரானார் விமல் வீரவன்ச
விமல் வீரவன்ச
ADVERTISEMENT
ADVERTISEMENT

விமல் வீரவன்ச

கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

அதன்போது, ​​கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT