இன்றைய வானிலையில் திடீர் மாற்றம்.. மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

இன்றைய வானிலையில் திடீர் மாற்றம்.. மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (15) பல காலப்பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று கி.மீ. 40-50 வரை வீசலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அதிகரிக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது கி.மீ. 60 வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

இந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது கி.மீ. 50 வரை அதிகரிக்கலாம்.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்பு அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கடற்றொழில் மற்றும் கப்பற்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT