அமைதி, ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹஜ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி

ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை அனைவரும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அமைதி, ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஹஜ் வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

புனித ஹஜ் பெருநாளையொட்டி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அல்லாஹ்வின் மீது இப்ராஹிம் நபி கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, பக்தி மற்றும் தியாக உணர்வை நினைவுகூரும் புனித நாளாக ஹஜ் பெருநாள் விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரையுடன் இந்தப் பெருநாள் இணைந்திருப்பது அதற்கு தனித்துவமான முக்கியத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இன்றைய உலகம் பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வரும் நிலையில், மனிதர்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிதல் மற்றும் சகோதரத்துவத்தின் அவசியத்தை ஹஜ் பெருநாள் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது என ஜனாதிபதி கூறியுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் சமூக, பொருளாதார வேறுபாடுகளைத் தாண்டி ஒன்றிணைந்து வழிபாடுகளில் ஈடுபடுவது சமத்துவத்திற்கும் மனித நேயத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கிடையிலும், மக்காவை நோக்கி புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹிம் நபியின் அர்ப்பணிப்பையும் தியாக உணர்வையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர் என அவர் பாராட்டியுள்ளார்.

சுயநலத்தை விட பொதுநலத்தை முன்னிறுத்தும், அமைதி மற்றும் ஒற்றுமை நிலவும் மனித சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், ஹஜ் பெருநாள் எடுத்துரைக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகம் போன்ற உயர்ந்த பண்புகளை அனைவரும் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆன்மீக விழுமியங்களின் வழிகாட்டுதலுடன் அபிவிருத்தியடைந்த மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதனுடன், இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இனிய ஈதுல் அழ்ஹா நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -