உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உணவு பாத்திரத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பெக்கேகம பகுதியைச் சேர்ந்த ஷயனி மெதும்சா  என்ற குறித்த மாணவி நேற்று முன்தினம் (02) உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பொசன் போயவை முன்னிட்டு பாணந்துறையில் கடந்த 23 ஆம் திகதி சாப்பாட்டு தன்சல் ஒன்று இடம்பெற்ற போது, சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றிலேயே சிறுமி விழுந்துள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT