இலங்கை - கம்போடியா நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து பிரதமர் ஹரிணியிடம் முன்மொழிவு

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.

இலங்கை - கம்போடியா நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து பிரதமர் ஹரிணியிடம் முன்மொழிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து கம்போடிய தூதுவர், பிரதமர் ஹரிணியை சந்தித்து முன்மொழிந்துள்ளார்.

புது டில்லியில் உள்ள கம்போடிய தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கைக்கான கம்போடிய தூதுவர் ராத் மானி, நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், இதன் ஊடாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளையும் அவர் விளக்கினார். 

இதன்போது, கம்போடிய சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான இடமாக இலங்கையை ஊக்குவிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக பிரதமர் ஹரிணி தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT