பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம் - 20 கைதிகள், பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம்

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலையின் சொத்துகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம் - 20 கைதிகள், பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராம சேவைப் பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து நேற்றிவு இந்த ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

246 கெந்தலியத்த வீதி மேற்கு, 246 C கெந்தலியத்த வீதி வடக்கு மற்றும் 181 G தம்புவா ஆகிய கிராம நிலதாரி பிரிவுகளுக்கே இந்த பொலிஸ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. 

இதேவேளை, சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, மஹர சிறைச்சாலையிலிருந்து 20 கைதிகள், பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலையின் சொத்துகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊரடங்கு நீக்கப்பட்ட போதிலும், சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT