இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Apr 1, 2024 - 18:59
இன்று(01) நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று(01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 135 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது. புதிய விலை 4,115 ரூபாயாகும்.

அத்துடன், 5 கிலோகிராம்  சிலிண்டரின் விலை 55 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் 1,652 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபாயாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

 லாஃப்ஸ் எரிவாயு விலை 

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் குறைத்துள்ளது.

இதன்படி,  12.5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 625 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.  புதிய விலை விலை 4,111 ரூபாயாகும்.

அத்துடன், 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 248 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை  1,652 ரூபாயாகும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.