தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க பிஸ்கெட் கடத்திய இந்திய வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய வர்த்தகர் ஒருவர், தனது காற்சட்டைப் பையில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கெட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா, சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர், நேற்றுப் பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சந்தேகநபரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கெட்டுகளையும் 3 சிறிய தங்க உருண்டைகளையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் சந்தேகநபரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT