முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று CIDக்கு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் மைத்திரிபால சிறிசேன பொய்யான தகவல்களை வெளியிட்டதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் சட்டப் பொறுப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT