வீடுகளுக்கு “Door to Door” பொருட்கள் விநியோக முறை இலங்கையில் இடைநிறுத்தம்!

குறித்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.
வீடுகளுக்கு “Door to Door” பொருட்கள் விநியோக முறை இலங்கையில் இடைநிறுத்தம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் விநியோகிக்கும் “Door to Door” முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

குறித்த விநியோக முறை ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் கிடைத்த தகவல்கள் மற்றும் பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதையும் படிங்க: அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்: ஜனவரியில் கொடுப்பனவு

இதனால், குறித்த விநியோக முறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, டிசெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களுக்கு இந்த முறை நடைமுறையில் இருக்கும் எனவும், அதற்கு முன்னர் அனுப்பப்படும் பொருட்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டிசெம்பர் முதலாம் திகதி முதல் அனுப்பப்படும் பொருட்களை இலங்கை சுங்கத்தின் சாதாரண சரக்கு முறையின் மூலம் இலங்கைக்கு அனுப்ப முடியும் என கூறப்படுகின்றது.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -