பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மலையக பெருந்தோட்ட பகுதியில் லயன் வீடுகளில் வாழும் தொழிலாளர்களையும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வேலைத் திட்டத்தில் உள்வாங்குவதற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

லயன் வீடுகளில் வசிக்கும் வெவ்வேறு குடும்பங்களை தனித்தனியே, இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெருந்தோட்டத்துறையில் தோட்டங்களில் தனி வீடுகள் இல்லாதிருப்பதால், தோட்டத் தொழிலாளர்கள் கூட்டாக ஒரே லயன் வீடுகளில் வசிக்கின்றனர். 

தற்போதைய நடைமுறைக்கமைய வெவ்வேறான குடும்ப எண்ணிக்கைகளைக் கருத்திற் கொள்ளாமல், லயன் அறைகளில் வாழ்கின்ற அனைத்து நபர்களும் ஒரே குடும்ப அலகாக கருதப்படுகின்றனர். இது அந்தக் குடும்பங்களுக்கு பாதகமானது என்பது உணரப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில் 2022 ஆண்டின் 01 இலக்க நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு கட்டளைகளின் பிரகாரம், அஸ்வெசும முன்மொழிவுத் திட்டத்திற்கு தகைமைகளை நிர்ணயிக்கும் போது லயன் வீடுகளில் வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் உண்மையான எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, செயலாற்றுமாறு நலன்புரி நன்மைகள் சபைக்கு உத்தரவிடுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT