70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் 'அஸ்வெசும' பணம்

உரிய தகுதியுடைய பயனாளிகள், நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்டோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை வங்கிக் கணக்கில் 'அஸ்வெசும' பணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2026 ஜூலை மாதத்துக்கான 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான 'அஸ்வெசும' முதியோர் கொடுப்பனவு நாளை வெள்ளிக்கிழமை (31) முதல் பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரிப் பலன்கள் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 621,638 முதியோர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக 3,108,190,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேவேளை, திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 77,324 பயனாளிகளுக்கு 386,620,000 ரூபாய் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.

இதன்படி, இரண்டு கட்டங்களையும் சேர்த்து 698,962 முதியோர் பயனாளிகளுக்கு மொத்தமாக 3,494,810,000 ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளது.

உரிய தகுதியுடைய பயனாளிகள், நாளை (31) முதல் தங்களுக்கான முதியோர் கொடுப்பனவை அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த கொடுப்பனவு, அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாதாந்தம் வழங்கப்பட்டு வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT