தெற்கில் குற்றச்செயல்களை ஒழிக்க பொலிஸ் மா அதிபரின் விசேட திட்டம்

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கில் குற்றச்செயல்களை ஒழிக்க பொலிஸ் மா அதிபரின் விசேட திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தென் மாகாணத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலி மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நேற்று (13) சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்ததுடன் காலி மற்றும் எல்பிட்டிய பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதயும் படிங்க: வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குற்ற அறிக்கைப் பிரிவு, கொழும்பு குற்றப்பிரிவு, சமூகப் பொலிஸ் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப்படை, புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விரைவில் வெளிக்கொணர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT