ஜனாதிபதி தேர்தல் - பஸ்களில் 99 சதவீதமான ஆசனங்கள் முன்பதிவு

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் - பஸ்களில் 99 சதவீதமான ஆசனங்கள் முன்பதிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பஸ்களில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதேபோல், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் பஸ்களில் 90 சதவீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களில் குறித்த நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், நாளை முதல் 23ஆம் திகதி வரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், 20, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை வாடகைக்கு வழங்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்துச் சபைக்கு அறிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT