ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம்  செலுத்துவதற்கான நடவடிக்கை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம்  செலுத்துவதற்கான நடவடிக்கை புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடைபெறும்  திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வௌியிடுத்தல் மற்றும் தபாலுக்கு வழங்குதல் எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, மாவட்ட செயலகம், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸாருக்கு தபால் மூல வாக்குப்பதிவு செப்டம்பர் 4 ஆம் திகதி இடம்பெறும்

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்கக் கோரிய ஏனைய தரப்பினருக்கு செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தபால் மூல வாக்களிப்பை தவறவிட்டவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் வாக்களிக்க ஒதுக்கப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT