பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!

விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெற்றோருடன் ஓட்டோவில் பயணித்த 2 வயது சிறுமி விபத்தில் பலி: கார் சாரதி கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கண்டி மாவட்டத்தின் தலாத்துஒய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலபிட்டிய பகுதியில் நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது இரண்டு மாதங்கள் கொண்ட சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

தென்னகும்பூர – ராகல பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்னகும்பூர நோக்கிப் பயணித்த சொகுசு கார் ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்திசையில் வந்த ஓட்டோவுடன் நேருக்கு நேர் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் சிறுமி, ஓட்டோவின் பின்புற ஆசனத்தில் பயணித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தினால் ஓட்டோவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடுமையாக காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக ஹங்குரன்கெத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர்களில் தீவிர காயமடைந்திருந்த சிறுமி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த சிறுமி உனுவின்ன பகுதியைச் சேர்ந்தவர் என ஆவர். விபத்தில் காயமடைந்த சிறுமியின் தாயாரும், ஓட்டோவை செலுத்திய தந்தையும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, விபத்துடன் தொடர்புடைய சொகுசு காரின் சாரதி, தலாத்துஒய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT