சுற்றுலாப் பயணிகள் வருகையில் சடுதியான மாற்றம்

இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆகும்.

சுற்றுலாப் பயணிகள் வருகையில் சடுதியான மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த மூன்று வாரங்களில் 120,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, அக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பதுடன் அவர்களின் எண்ணிக்கை  30,442 ஆகும்.

அதுமட்டுமின்றி பிரிட்டன், சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கையின்படி, இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 38,174 சுற்றுலாப் பயணிகள் தீவுப்பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT