யாழ்ப்பாணம் செல்ல முயன்ற 2 பெண்கள் கைது

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் செல்ல முயன்ற 2 பெண்கள் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து  வந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் சென்னை முகவரிகள் கொண்ட, இந்திய கடவுச்சீட்டுடன் வந்த நிலையில், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்த போது இரண்டுமே போலியான கடவுச்சீட்டுக்கள் என்று தெரிய வந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதையடுத்து, கங்கா சுந்தரதாசன் (46), சொர்ணகலா சுந்தரேசன் (22) என்ற பெண்களின் பயணங்களையும், குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பொலிஸ் விசாரணையில், இவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து, சுற்றுலா பயணிகள் விசாவில் சென்னைக்கு வந்து விட்டு, இங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். 

அவர்கள், ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து போலியான இந்திய கடவுச்சீட்டுக்கள் பெற்றுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல முயன்றனர் என்று தெரிய வந்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

பின்னர் சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், 2 பெண்களையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT