நாட்டின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியால நீர் வெட்டு
ADVERTISEMENT
ADVERTISEMENT

 12 மணித்தியால நீர் வெட்டு

களுத்துறை உட்பட பகுதிகளில் இன்றைய தினம், 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிட்டிய, மொறொந்துடுவ, கட்டுகுருந்த, நாகொட, பொம்புவல மற்றும் பிலமினாவத்தை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT