தபால் மூல விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்று(23) நிறைவடைகிறது.

தபால் மூல விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நிறைவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்று(23) நிறைவடைகிறது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், தபால் மற்றும் புகையிரத ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான தேவைகளை www.elections.gov.lk அல்லது 1919ஐ தொடர்பு கொண்டு அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தபால் மூல வாக்களிக்கும் விண்ணப்பங்களை இணையத்திலும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT