குளியலறையில் உயிரிழந்த இளம் பெண்.. மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளியலறையில் உயிரிழந்த இளம் பெண்.. மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

வத்தளை பகுதியில் வீட்டின் குளியலறையில் தவறி விழுந்து இளம் பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் 24ஆம் திகதி, ஹெந்தல பலகல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் குளியலறையில் விழுந்து உயிரிழந்ததாக பெண்ணின் தந்தை வத்தளை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ராகம பொது வைத்தியசாலையில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற மரண விசாரணையின் பின்னர், மரணம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, பதில் நீதவான் தலைமையில் நேற்று சம்பந்தப்பட்ட நீதவான் விசாரணை நடத்தப்படவிருந்தது. எனினும், சட்ட வைத்திய அதிகாரி ஆஜராகாததால், உரிய பிரேத பரிசோதனை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், வத்தளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரைக்கு அமைய குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT