வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது 

இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன.

வெஸ்ட் இண்டீஸ் 3ஆவது போட்டியில் வென்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது 
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்து மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறன.

முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று நடைபெற்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 40 ஓவராகக் குறைக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. பென் டெக்கெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 71 ரன்னில் அவுட்டானார். லிவிங்ஸ்டோன் 45 ரன்னில் வெளியேறினார்.

இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் டி.ஆர்.எஸ் முறைப்படி 34 ஓவரில் 188 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணியின் கெய்சி கார்டி சிறப்பாக ஆடி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் ஆலிக் அதான்சே 45 ரன்னில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் ரொமாரியோ ஷெப்பர்டு அதிரடியாக ஆடி 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 31.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஆட்ட நாயகனாக மேத்யூ போர்டேவும், தொடர் நாயகனாக ஷாய் ஹோப்பும் தேர்வாகினர். இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT