25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய 25 வயது இனைஞனுக்கு விளக்கமறியல்

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, போலி நிறுவனங்கள் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பிய 25 வயது இனைஞனுக்கு விளக்கமறியல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞனை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம், இன்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

பொருட்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்களைப் பயன்படுத்தி 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 826 கோடி இலங்கை ரூபாய்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்தமை தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் (FCID) வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 25 வயதான இந்தச் சந்தேகநபர், உள்நாட்டு வர்த்தக வங்கிகள் ஊடாக தபால் பரிமாற்றல் (TT) முறைமையைப் பயன்படுத்தி இப்பெருந்தொகையான நிதியை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாக விசாரணைகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 6 போலி நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்களை முன்பதிவு செய்வதாகக் காண்பித்து, சந்தேகநபர் இந்த நிதி மோசடியை மிக நுட்பமாக முன்னெடுத்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான காலப்பகுதியில் இந்த பாரிய நிதி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும், குறித்த பணப் பரிவர்த்தனைகளுக்குரிய எந்தவொரு பொருளும் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT