வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

வானிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 
ADVERTISEMENT
ADVERTISEMENT

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு அடுத்த 24 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும்.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இயங்கும் பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மிக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT