ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்த டிரம்ப் ஒப்புதல்

ஈரான் மீது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் அமைதி பேச்சுவார்த்தைக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு தாக்குதலை நிறுத்த டிரம்ப் ஒப்புதல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலைக்கு இடையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கியமான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக, தாக்குதலை தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இந்த முடிவு, நிலைமை மேலும் மோசமடையாமல் தடுக்க எடுத்த முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர்  ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், ஈரானுக்கு கூடுதல் அவகாசம் வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால், இருதரப்பு போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானுடன் நீண்டகால அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்க தரப்பில் கூறப்படுகிறது. 10 அம்சங்கள் கொண்ட முன்மொழிவு குறித்து இருதரப்பும் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதை இறுதி செய்ய இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெற்றியடைந்தால், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் குறைந்து, உலக பொருளாதாரத்திற்கும் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT