தீபாவளிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

அனைத்து அரசு அலுவலகங்கள், பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை அறிவித்துள்ளது. 

தீபாவளிக்கு மறுநாள் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இவ்வாண்டு தீபாவளி 12.11.2023 அன்று கொண்டாடப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இக்கால கட்டத்தில் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பாடசாலை, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

மேலும், அவ்விடுமுறையை ஈடு செய்யும்வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது’ என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT