775 கிராம் கடத்தல் தங்கத்துடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கொழும்பில் கைது

30, 45 மற்றும் 50 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

775 கிராம் கடத்தல் தங்கத்துடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கொழும்பில் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட 775 கிராம் தங்கத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இந்தியப் பிரஜைகள் மூவர், கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை, ஆர்மர் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (16) கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

30, 45 மற்றும் 50 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT