உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டு எது தெரியுமா?


உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டு எது தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியலை Henley Passport Index வெளியிட்டுள்ளது. 

அதன்படி, உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டாக சிங்கப்பூர் கடவுச்சீட்டு முதலிடம் பிடித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

Henley Passport Index, 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளை மதிப்பிட்டு, அவற்றை வரிசைப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் கடவுச்சீட்டைக் கொண்டு 192 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என்று கூறப்பட்டது. 

அது முன்னர், சிங்கப்பூர் கடவுச்சீட்டு 2ஆம் இடத்தில் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

5 ஆண்டுகளாக முதலிடம் பிடித்த ஜப்பான் தற்போது மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. ஜப்பான் கடவுச்சீட்டைக் கொண்டு 189 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும்.

இரண்டாம் இடத்தில் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய கடவுச்சீட்டுகள் இடம்பிடித்துள்ளன. இவற்றின்மூலம், விசா இல்லாமல் 190 இடங்களுக்குச் செல்ல முடியும்.

அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் தகவலைக் கொண்டு, கடவுச்சீட்டுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

உலகிலேயே செல்வாக்குமிக்க கடவுச்சீட்டுகளின் பட்டியல் இதோ...

முதலிடம்: 192 இடங்களுக்கு விசா இன்றி செல்லமுடியும்

சிங்கப்பூர்

2ஆம் இடம்: 190 இடங்களுக்கு விசா இன்றி செல்லமுடியும்

ஜெர்மனி
இத்தாலி
ஸ்பெயின்

3ஆம் இடம்: 189 இடங்களுக்கு விசா இன்றி செல்லமுடியும்

ஜப்பான்
ஆஸ்திரியா
பின்லந்து
பிரான்ஸ்
தென் கொரியா
சுவீடன்
லக்ஸம்பர்க் (Luxembourg)

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT