நீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து 2 வயது பெண்குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று (25) மாலை  குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வீட்டு முற்றத்தில் விளையாடிய நிலையில், சிறிது நேரத்தில் குழந்தையை காணாத பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் விழுந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்னரே குறித்த குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT