அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை வீழ்ச்சி: இன்றைய நாணய மாற்று விகிதம்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.97 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விலை வீழ்ச்சி: இன்றைய நாணய மாற்று விகிதம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்று (03) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாயாக பதிவாகியுள்ளது. அதேவேளை, டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.97 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நேற்று (02) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 326.75 ரூபாயாகவும், விற்பனை விலை 336.60 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, ஒரே நாளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 1.25 ரூபாயாலும், விற்பனை விலை 1.37 ரூபாயாலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி டொலருக்கு எதிராக சற்றே பலவீனமடைந்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சர்வதேச சந்தை நிலவரங்கள், வெளிநாட்டு நாணயத் தேவை மற்றும் உள்நாட்டு பொருளாதார காரணிகள் ஆகியவை நாணய மாற்று விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT