உயிருக்கு போராடிய இலங்கையின் பிரபல நடிகர் மரணம்

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் அன்டனி தனது 62ஆவது வயதில் இன்று(09) காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு போராடிய இலங்கையின் பிரபல நடிகர் மரணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் அன்டனி தனது 62ஆவது வயதில் இன்று(09) காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  ஜெக்சன் அன்டனி சிகிச்சை பெற்று வந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த வாகனம் யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் செயற்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT