பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானிலை மாற்றம்! பல பகுதிகளில் கனமழை, காற்று குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பிறகு வானிலை மாற்றம்! பல பகுதிகளில் கனமழை, காற்று குறித்து எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், தெற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சில நேரங்களில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT