வீதியில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் மரணம்

வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் திடீரென மயங்கி விழுந்து மாணவன் மரணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

புலத்சிங்கள- கோபவக, கோவின்ன பகுதியைச் சேர்ந்த மாணவன் நேற்று (09) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்திருந்த நிலையில் ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வீட்டிலிருந்து பாடசாலைக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு  சுமார் 01 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டும். வீட்டிலிருந்து நடந்து சென்ற மாணவன், சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து சென்றபோது வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், மாணவன் உடனடியாக ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT