இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 7 ஆண்களுக்கு ஒரு பெண் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையிலான பாதுகாப்பற்ற உடலுறவே பிரதான காரணம் என விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அதிகரிக்கும் HIV தொற்று! 7 ஆண்களுக்கு ஒரு பெண் – வைத்திய நிபுணர் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நிகழும் பாதுகாப்பற்ற உடலுறவே பிரதான காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

நாட்டில் தற்போது ஒரு பெண் எச்.ஐ.வி தொற்றாளராக அடையாளம் காணப்படும் அதேவேளையில், 07 ஆண்கள் இந்நோய்த் தொற்றாளர்களாகப் பதிவாகும் தீவிர நிலை காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி வைத்தியத் துறையின் தற்போதைய போக்குகள், நோய் தடுப்பு முறைகள் மற்றும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள் குறித்து ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர்கூட மண்டபத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று புதன்கிழமை (14) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை பாலியல் சுகாதாரம் மற்றும் எச்.ஐ.வி மருத்துவத் துறை விசேட வைத்திய நிபுணர்கள் கல்லூரியின் தலைவியான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய, ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையேயே இந்நோய் அதிகளவில் பரவி வருவதாகத் தெரிவித்தார். 

மேலும், போதைப்பொருட்களை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துவதனாலும் எச்.ஐ.வி பரவல் பதிவாகி வருவதாகவும், இது நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டிய ஓர் ஆபத்தான நிலைமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT