மின்சார சபை ஊழியர்கள் சிலர் பணி இடைநீக்கம்!

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.

மின்சார சபை ஊழியர்கள் சிலர் பணி இடைநீக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த மின்சார சபை ஊழியர்கள் சிலரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற போராட்டத்தின் போது மின் கட்டணம் செலுத்துவதற்கு இடையூறு விளைவித்த 15 பேரே பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மின்சார சபையை தனியார் மயமாக்கப் போவதாக அண்மையில் அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்புப் பிரசாரத்தை முன்னெடுத்திருந்தன.

இதனையடுத்து, மின்சார சபையின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை மீறும் வகையில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT