எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.  

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனம் எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீற்றரின் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாயாகும்.

420 ரூபாயாக இருந்த ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின் விலை 41 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபாயாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

377 ரூபாயாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாயாகும்.

ஓட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT