நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதாக தெரிவித்த அவர், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அத்துடன் கல்வி ஆய்வுகளுக்கான வரி விதிப்பு தொடர்பில் புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த 3 வாரங்களுக்குள் தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.