வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி அநுர 15ஆம் திகதி விஜயம்

ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தனது வடக்கு மாகாண விஜயம் குறித்து அவர் அறிவித்தார்.

வடக்கு மாகாணத்திற்கு ஜனாதிபதி அநுர 15ஆம் திகதி விஜயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம், பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தனது வடக்கு மாகாண விஜயம் குறித்து அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தக் கூட்டத்தில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணிகளை விடுவிப்பது, மூடப்பட்டுள்ள வீதிகளை மீண்டும் திறப்பது, பாடசாலைகளை வழமைபோல் நடத்திச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். அதேபோல், தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த பிரச்சினைகளுக்கு நடைமுறைசார்ந்த மற்றும் சாத்தியமான தீர்வுகளை வழங்க அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கியுள்ளார். மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது, இவ்விடயங்களை நேரடியாக ஆய்வு செய்து ஆழமாக பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT