இந்த ஒரு விதிமுறை மட்டும் வேணாம்… நாங்களும் பாவம் தானே; முகமது சிராஜ் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் இருப்பதால், இதனை பிசிசிஐ., அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும்.

இந்த ஒரு விதிமுறை மட்டும் வேணாம்… நாங்களும் பாவம் தானே; முகமது சிராஜ் கோரிக்கை!
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐபிஎல் போட்டிகளுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் இருப்பதால், இதனை பிசிசிஐ., அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்கும். ஐபிஎல் போட்டிகளை மேலும் பரபரப்பாக்குவதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறையை பிசிசிஐ., அறிமுகப்படுத்தியது. 

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமே சாதகமான போட்டியாக மாறியதால் 250+ ரன்களை பல அணிகள் அசால்டாக அடித்து பல சாதனைகள் படைத்து வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

என்னதான் இம்பேக்ட் விதிமுறை போட்டியை மேலும் விறுவிறுப்பாக்கினாலும், இதன் மூலம் ஒரு விளையாட்டின் உண்மைத்தன்மை குறைந்துவிட்டதாக கூறி கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் இம்பேக்ட் விதிமுறையை நீக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இம்பேக்ட் விதிமுறையில் தனக்கு பெரிய உடன்பாடு இல்லை, இதனால் சிவம் துபே போன்ற பந்துவீசுவதற்கு தேவையே இல்லாமல் போய்விட்டது, கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாடும் விளையாட்டாகவே இருக்க வேண்டும் என ஓபனாக பேசியிருந்தார்.

இம்பேக்ட் விதிமுறை குறித்தான ரோஹித் சர்மாவின் சமீபத்திய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான முகமது சிராஜும் இம்பேக்ட் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது குறித்து முகமது சிராஜ் பேசுகையில், “இம்பேக்ட் விதிமுறையை நீக்க வேண்டும். பெரும்பாலான ஆடுகளங்கள் பிளாட்டாக இருப்பதால் பந்துவீச்சாளர்கள் ஏற்கனவே கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். 

இம்பேக்ட் விதிமுறையால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை என்ற நிலையே நிலவி வருகிறது. பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விடுகின்றனர். பேட்ஸ்மேன்களால் 270+ ரன்கள் அசால்டாக எடுக்க முடிகிறது, ஆனால் பந்துவீச்சாளர்களான எங்களுக்கு சாதகமாக எதுவுமே இல்லை” என்று தெரிவித்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT