மோட்டார் சைக்கிளை வழிமறித்த காரில் வந்த குழு வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு!

பிலியந்தலை சுவாரப்பொல பகுதியில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து காரில் வந்த கும்பல் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை வழிமறித்த காரில் வந்த குழு வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிலியந்தலை, சுவாரப்பொல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை வழிமறித்த குழுவினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காரில் வந்த சந்தேகநபர்கள் குழுவினர், குறித்த மோட்டார் சைக்கிளின் பயணத்தை தடுத்து நிறுத்தி இவ்வாறு துப்பாக்கியால் வானத்தை நோக்கி பலமுறை சுட்டுள்ளனர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கும், இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துக்கான பின்னணி மற்றும் காரணங்களைக் கண்டறிவதற்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT