பட்ஜெட் 2027-28 தயாரிப்பு; ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வித் துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

மத்திய பட்ஜெட் 2027-28 தயாரிப்புப் பணிகளின் கீழ் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் உயர்கல்வித் துறை நிபுணர்களுடனான 11ஆவது ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் தலைமை தாங்கினார்.

பட்ஜெட் 2027-28 தயாரிப்பு; ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வித் துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
ADVERTISEMENT
ADVERTISEMENT

எதிர்வரும் 2027-28ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) மற்றும் உயர்கல்வித் துறை நிபுணர்களுடனான 11ஆவது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுடெல்லியில் இன்று (நவம்பர் 23) தலைமை தாங்கினார்.

மத்திய நிதியமைச்சின் தகவல்படி, இக்கூட்டத்தில் பொருளாதார விவகாரங்கள் திணைக்களம், கல்வி அமைச்சு மற்றும் உயிரித்தொழில்நுட்பத் திணைக்களம் ஆகியவற்றின் செயலாளர்களுடன் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

2026-27ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் உயர்கல்வித் துறைகளுக்குப் பாரிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருந்த பின்னணியில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திணைக்களத்திற்கு 28,049.32 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதில் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் புத்தாக்கத் திட்டத்திற்கு (RDI) 20,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு 2,000 கோடி ரூபாவும், தேசிய குவாண்டம் திட்டத்திற்கு 900 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டு ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தது.

அதேபோல், 2026-27 பட்ஜெட்டில் உயர்கல்வித் திணைக்களத்திற்கு 55,727.22 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இது அதற்கு முந்தைய ஆண்டின் பட்ஜெட் மதிப்பீடான 50,077.95 கோடி ரூபாவை விட அதிகமாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த ஒதுக்கீட்டில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கு (IITs) 12,123 கோடி ரூபாவும், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு 17,440 கோடி ரூபாவும், பிரதமரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் திட்டத்திற்கு 600 கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இன்று காலை, 2027-28 மத்திய பட்ஜெட் தொடர்பாகச் சுகாதாரம் மற்றும் சமூகத் துறை நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான 10ஆவது பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்.

இதில் பொருளாதார விவகாரங்கள் திணைக்களம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சின் செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஆகியோர் பங்கேற்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT