கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் வாடகைக்கு குடியிருப்போருக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவின் டொறன்ரோவில் வாடகை குடியிருப்பாளர்களை பாதுகாக்கும் நோக்கில் புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாடகைக்கு குடியிருப்போரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் சில மோசடிகளை கருத்தில் கொண்டு டொறன்ரோ நகர பேரவையினால் இந்த புதிய சட்டம் குறித்து யோசனை முன்மொழிப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறிப்பாக வாடகைக்கு குடியிருப்போரை வீட்டு உரிமையாளர்கள் திடீரென வீட்டை விட்டு வெளியேற்றுவதனை தடுக்க புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளது.

வீடுகளை பழுது பார்ப்பதாக அல்லது புதுப்பிப்பதாக கூறி வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கூடுதல் தொகைக்கு வீட்டை வாடகைக்கு விடும் நோக்கின் இவ்வாறு வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்தோடு,  ஒப்பந்த காலத்திற்கு முன்னதாகவே வீட்டு உரிமையாளர்களினால் வாடகை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையினால் வாடகை குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT