புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்: டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு எட்டப்படாவிட்டால் புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்: டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாட்டை எட்டத் தவறினால், புத்தாண்டின் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை நடத்தத் தாம் ஈடுபாட்டுடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 'பொக்ஸ் நியூஸ்' (Fox News) தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெஹ்ரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி ட்ரம்ப், அப்பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதமை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களைத் "தொழில்முறை நடனக் கலைஞர்கள்" என வர்ணித்த அவர், அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதாகவும், அவர்கள் செய்வதெல்லாம் பேசுவது மட்டும்தான் எனவும், ஆனால், அவை அனைத்தும் அர்த்தமற்றவை எனவும் விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கக் கடற்படை விதித்துள்ள முற்றுகை தொடரும் நிலையிலும், ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலிலும் ட்ரம்பின் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை தெஹ்ரான் சோதித்துப் பார்க்கக்கூடும் என ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, அதனைக் கடக்க முயற்சிக்கும் ஈரானியக் கப்பல்கள் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் என ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார். மேலும், முற்றுகையை மீற முயற்சிக்கும் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT