அநாகரிகத் தாக்குதல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டு; சிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் கைது

நாகரிகத் தாக்குதல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் ஹராரேயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநாகரிகத் தாக்குதல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டு; சிம்பாப்வே மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

அநாகரிகத் தாக்குதல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில், 'ஸ்பிரிட் எம்பஸி' (Spirit Embassy) அமைப்பின் நிறுவனரும் சிம்பாப்வேயின் விசேட தூதுவருமான மதபோதகர் யூபர்ட் ஏஞ்சல் (Uebert Angel) 2026 நவம்பர் 22ஆம் திகதி சிம்பாப்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவராக இவர் அறியப்படுகிறார்.

அன்று பிற்பகல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவொன்றின் மூலம் சிம்பாப்வே குடியரசுப் பொலிஸார் (ZRP) இந்தக் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியுள்ளனர். அநாகரிகத் தாக்குதல் மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தீர்க்கதரிசி யூபர்ட் ஏஞ்சல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்த மேலதிக விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்றும் பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தேசிய பொலிஸ் பேச்சாளர் ஆணையாளர் போல் நியாத்தி இந்தக் கைதை உறுதிப்படுத்தியுள்ளதாக அரச ஊடகமான 'ஹெரால்ட்' 2026 நவம்பர் 23ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், யார் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, குறித்த சம்பவங்கள் எப்போது இடம்பெற்றன அல்லது அவர் எப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பது குறித்த விவரங்களைப் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

ஹராரே நகரில் உள்ள யூபர்ட் ஏஞ்சலின் 'ஸ்பிரிட் எம்பஸி' தலைமையகமான ஹிப்போட்ரோமில் (Hippodrome) ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாகப் பல சிம்பாப்வே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யூபர்ட் முட்சானிரே என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், சிம்பாப்வேயின் மிக முக்கிய மதத் தலைவர்களில் ஒருவராகவும், ஜனாதிபதியின் விசேட தூதுவராகவும் (Ambassador-at-Large) பதவி வகிப்பவராகவும் விளங்குகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக யூபர்ட் ஏஞ்சல், அவரது சட்டத்தரணிகள் அல்லது அவரது தேவாலயத் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ பதிலும் வெளியிடப்படவில்லை. கைது நடவடிக்கை என்பது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அமையாது என்பதுடன், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இதுவரை விசாரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, கானா நாட்டின் மதகுரு ஒருவரைப் பாராட்டிப் பேசியதன் மூலம் இம்மாத ஆரம்பத்தில் யூபர்ட் ஏஞ்சல் கானா ஊடகங்களில் கவனம் பெற்றிருந்தார். கானாவின் 'குளோரியஸ் வேர்ட் அண்ட் பவர் மினிஸ்ட்ரி' நிறுவனர் அருட்தந்தை ஐசக் ஓவுசு-பெம்பாவை, கடவுள் தனக்குத் தரிசனங்கள் மூலம் வெளிப்படுத்திய உலகின் ஏழு உண்மையான தீர்க்கதரிசிகளில் ஒருவர் என நவம்பர் 7ஆம் திகதி அவர் தனது சபையினரிடம் தெரிவித்திருந்தார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT