பாடசாலை பாடத்திட்டங்களில் வரவுள்ள புதிய மாற்றம்

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பாடத்திட்டங்களில் வரவுள்ள புதிய மாற்றம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், மாற்றத்துக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அத்துடன், 10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஓரளவு மாற்றம் இருக்கும் எனவும் ஏனைய வகுப்புகளில் முக்கியமான மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான புதிய கற்றல் கற்பித்தல் செயல்முறை எதிர்வரும் 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வகுப்பறைகளில் செயற்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதற்கான, அமைச்சரவை பத்திரங்களுக்கான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளை தயாரித்தல், புத்தகங்களை தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT