விண்வெளியில் கீழே வீசப்பட்ட பை... பூமிக்கு எப்போது வரும் தெரியுமா?

விண்வெளியில் ஏதேனும் பொருளைக் கீழே போட்டால் என்னவாகும்? அது விண்வெளியில் மிதந்துகொண்டே இருக்கக்கூடும்.

விண்வெளியில் கீழே வீசப்பட்ட பை... பூமிக்கு எப்போது வரும் தெரியுமா?
ADVERTISEMENT
ADVERTISEMENT

விண்வெளியில் ஏதேனும் பொருளைக் கீழே போட்டால் என்னவாகும்? அது விண்வெளியில் மிதந்துகொண்டே இருக்கக்கூடும்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் (NASA) சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் தெரியாமல் கீழே போட்ட கருவிகளைக் கொண்ட பை அப்படித்தான் மிதந்துகொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜாஸ்மின் மோக்பெலியும் (Jasmin Moghbeli) லோரல் ஓ ஹாராவும் (Loral O'Hara) அனைத்துலக விண்வெளி நிலையத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இருவரும் நிலையத்திற்கு வெளியே சுமார் 7 மணிநேரத்திற்கு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பை விண்வெளிக் குப்பையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதைப் பூமியிலிருந்து தொலைநோக்கியைக் கொண்டு காணமுடியும் என்றும், வரும் மாதங்களில் அது பூமிக்குள் வரும் என்றும் அப்போது அது எரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT