பால்மாவின் வற் வரியை நீக்க நடவடிக்கை வெளியான அறிவிப்பு

நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (18) தெரிவித்துள்ளார்.

பால்மாவின் வற் வரியை நீக்க நடவடிக்கை வெளியான அறிவிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா மற்றும் யோகட் என்பவற்றுக்கான வற் வரியை நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மதிப்பாய்வின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனை, நாடாளுமன்றில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (18)  தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

“கடந்த அரசாங்கத்தினால் பால்மா மற்றும் யோகட் உள்ளிட்ட பொருட்களுக்கும் வற் வரி அறவிடப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி வரி 30 சதவீதமாகக் காணப்பட்டது. அதனை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையில் 15 சதவீதமாகக் குறைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அத்துடன். கட்டுப்படுத்தப்பட்ட வரியை ஐந்து சதவீதத்திலிருந்து பத்து சதவீதமாக அதிகரிப்பதற்கு நாம் சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாம் மதிப்பாய்வின் போது இணக்கப்பாட்டை எட்டியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT