முதலாமிடத்துக்கு முன்னேறிய மகேஷ் தீக்‌ஷன

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கையின் மகேஷ் தீக்‌ஷன முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலாமிடத்துக்கு முன்னேறிய மகேஷ் தீக்‌ஷன
ADVERTISEMENT
ADVERTISEMENT

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கையின் மகேஷ் தீக்‌ஷன முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதை அடுத்து, அவர் ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய இந்தியாவின் குல்தீப் யாதவ், ஓரிடம் முன்னேறி நான்காம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

நியூசிலாந்தின் மிற்செல் சான்ட்னெர், 12ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை

1. மகேஷ் தீக்‌ஷன
2. ரஷீட் கான்
3. பெர்னார்ட் ஸ்கொல்ட்ஸ்
4. குல்தீப் யாதவ்
5. ஷகீன் ஷா அஃப்ரிடி
6. கேஷவ் மஹராஜ்
7. மிற்செல் சான்ட்னெர்
8. மற் ஹென்றி, 
9.குடகேஷ் மோட்டி
10.  மொஹமட் சிராஜ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதேவேளை இந்தியாவின் ஷுப்மன் கில், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்திலிருந்து முன்னேறி முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஹெய்ன்றிச் கிளாசென், ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை பெற்றுள்ளார்.

இலங்கையின் சரித் அசலங்க, 16ஆம் இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை

1. ஷுப்மன் கில்
2. பாபர் அஸாம்
3. றோஹித் ஷர்மா
4. ஹெய்ன்றிச் கிளாசென்
5. டரைல் மிற்செல்
6. விராட் கோலி
7. ஹரி டெக்டர்
8. சரித் அசலங்க
9. ஷ்ரேயாஸ் ஐயர்
10. ஷே ஹோப், ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ்

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை

1. மொஹமட் நபி
2. சிகண்டர் ராசா
3. அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய்
4. மெஹிடி ஹஸன் மிராஸ்
5. ரஷீட் கான்

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT