கண்டியை பந்தாடி தம்புள்ளை அசத்தல் வெற்றி!

லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

கண்டியை பந்தாடி தம்புள்ளை அசத்தல் வெற்றி!
ADVERTISEMENT
ADVERTISEMENT

லங்கா பிரீமியர் லிக் தொடரின் 4ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பி லௌவ் கண்டி மற்றும் தம்புள்ளை ஆரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பி லௌவ் கண்டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதன்படி களமிறங்கிய தம்புள்ளை அணிக்கு அவிஷ்க ஃபெர்னாண்டோ - சதீரா சமரவிக்ரம இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். 

இதில் சமரவிக்ரம 31 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய லசித் 6 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவிஷ்க ஃபெர்னாண்டோவும் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய பென் மெக்டர்மோட் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களையும், தனஞ்செய டி சில்வா 10 ரன்களையும், ஹெய்டன் கெர் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையா ஸ்கோரை உயர்த்தினர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் தம்புள்ளை ஆரா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களைச் சேர்த்தது. 

கண்டி அணி தரப்பில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும், டி சில்வா, வநிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஹாரிஸ் 2 ரன்களுக்கும், ஃபகர் ஸமான் 8 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் களமிறங்கிய தினேஷ் சந்திமால் - வநிந்து ஹசரங்க இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

பின் வநிந்து ஹசரங்க 19 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 26 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த தினேஷ் சண்டிமல் 50 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர்.  இதனால் 19.4 ஓவர்களில் கண்டி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தம்புள்ளை அணி தரப்பில் தனஞ்செய டி சில்வா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் தம்புள்ளை ஆரா அணி 20 ரன்கள் வித்தியாச்தில் பி லௌவ் கண்டி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT